Categories: அரசியல்

கொல்கத்தாவில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பா.ஜ.க பேரணி.!

வெளியிட்டது
கொல்கத்தாவில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பா.ஜ.க பேரணி.! 1

பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் இன்று குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார்.

மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் அந்த மாநிலத்தில் சில நாட்களாக குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா அவர்கள் இன்று கொல்கத்தாவில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பேரணி நடத்தினார். அதில் மேற்கு வங்கத்தின் பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா, அம்மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேரணி ஹிந்த் சினிமா-சிஆர் அவென்யூவில் இருந்து தொடங்கி பின்னர் ஷியாம்பசாவில் முடிவடையும். மேலும் குடியுரிமை திருத்த மசோதாவை அமல்படுத்துவதால் மக்கள் பெறும் நன்மைகள் குறித்து ஷியாம்பாசாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா அவர்கள் பேசவுள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்