தங்கப் பதக்கத்தை திரும்பி கொடுத்த மாணவி

புதுச்சேரி பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்ததற்காக அனுமதிக்க மறுத்ததால் பதக்கத்தை வாங்க மாணவி மறுத்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்காக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார்.

விளம்பரம்
தங்கப் பதக்கத்தை திரும்பி கொடுத்த மாணவி 1
மாணவி ரபிஹா

பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசுத் தலைவரின் பாதுகாப்புக்காக வந்திருந்த அதிகாரிகள் கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹீஜாப்பை அகற்ற கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அம்மாணவி மறுக்கவே விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். இதனைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் விழாவை முடித்துவிட்டு சென்றதும் இம்மாணவிக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட கோபத்தில் தனது தங்கப்பதக்கத்தை திருப்பி கொடுத்து விட்டார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment