Categories: அரசியல்

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் : அமித் ஷா!!

வெளியிட்டது
சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் : அமித் ஷா!! 1

இந்தியாவின் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க கட்சியின் தலைவருமான அமித் ஷா அவர்கள் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய அனைத்து வெளிநாட்டினரையும் வெளியேற்றப் போவதாக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் வருகிற 21ம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அமித் ஷா அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் நேற்று குர்கானில் நடைபெற்ற பேரணியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவர்கள் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் பொது கூட்டத்தில் கூறியுள்ளார். அமித் ஷாா அவர்கள்

“ராகுல் பாபா ஏன் என்.ஆர்.சியை எதிர்க்கிறார்? இந்த அகதிகள் அவரது உறவினர்களா? ஏன் அவரும் (பூபிந்தர் சிங்) ஹூடாவும் இந்த அகதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்படுகிறார்கள். ஹூடாவும் ராகுல் பாபாவும் என்.ஆர்.சியை எதிர்க்கட்டும். 2024 க்குள் புலம்பெயர்ந்தோர் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று நான் உங்களுக்கு அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.”

பிரசாத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்