போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.! பின்னணி என்ன?

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காகவும், மரியாதை நிமித்தமாகவும் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ரஜினிகாந்தை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் குரல் கொடுத்திருந்தார் ரஜினிகாந்த்.

போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.! பின்னணி என்ன? 1

விளம்பரம்

அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால் தான் அவர்கள் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்கிற கருத்து நிலவி வருகிறது. பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவர் மறைவுக்கு பின்னர் கட்சி ஆரம்பிக்க போவதாக கூறி வந்த ரஜினிகாந்த், பின்னர் கொரோனா தொற்று காரணமாக தனது திட்டத்தை கைவிட்டு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சுமார் 600 கோடி வசூலை நெருங்கி மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.

தொடர்புடையவை  சர்ச்சைகளுக்கு நடுவே சைலன்ட்டாக சாதித்து காட்டிய மாமன்னன்.! ஒரே வாரத்தில் செய்த புது சாதனை.!

போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.! பின்னணி என்ன? 3

விளம்பரம்

படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே இமயமலை பயணம் செய்திருந்தார் ரஜினி. அங்கு பாஜக தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். குறிப்பாக உ.பி முதல்வர் யோகி காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வர் தனியாக கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இவர் தனியாக கட்சி தொடங்குவதை பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.! பின்னணி என்ன? 5

விளம்பரம்

இந்த நிலையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்ற ஓ பன்னீர்செல்வம் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ரஜினியுடன் ஓபிஎஸ் அரசியல் நிலவரம் குறித்து பேசினார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலர் பட வெற்றிக்காகவும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: News Tamil 24×7

விளம்பரம்

Leave a Comment