திடீரென கேக் வெட்டி கொண்டாடிய எதிர்நீச்சல் டீம்.! என்ன காரணம் தெரியுமா? எல்லாம் நல்ல விஷயம் தான்.!

சன் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல்தான் எதிர்நீச்சல் சீரியல். தற்போது இந்த சீரியலில் நடிகர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது நாடகம் தொடங்கி 500 எபிசோடுகளை நிறைவடைந்து இருப்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் பலரும் ஜோடியாக இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அதை பகிர்ந்து வருகின்றனர். பலரும் எதிர்நீச்சல் சீரியல் குழுவினருக்கும் அதில் நடித்து வரும் நடிகர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திடீரென கேக் வெட்டி கொண்டாடிய எதிர்நீச்சல் டீம்.! என்ன காரணம் தெரியுமா? எல்லாம் நல்ல விஷயம் தான்.! 1

விளம்பரம்

சின்னத்திரை உலகில் யாரும் செய்ய முடியாத சாதனைகளை செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது முதலிடம் பிடித்து வரும் இந்த சீரியல் 11.16 புள்ளிகளை பெற்று எந்த சீரியலும் செய்யாத புதிய சாதனையை படைத்திருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளும் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது கதையில் புதுவராக ஜீவானந்தம் இணைந்து இருக்கிறார். ஜீவானந்தம் அப்பத்தாவின் பங்குகளை அபகரித்துக் கொண்டு குணசேகரனுக்கு ஆப்பு வைத்திருக்கிறார். ஆனால் இவர் எதற்காக இப்படி செய்தார் என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே நீடித்து வருகிறது.

தொடர்புடையவை  என் கேரக்டர் பத்தி தப்பா சொல்லாத நிரூப்.. மனமுடைந்து அழுத ஜூலி | BiggBoss Ultimate Mar02 Promo1

திடீரென கேக் வெட்டி கொண்டாடிய எதிர்நீச்சல் டீம்.! என்ன காரணம் தெரியுமா? எல்லாம் நல்ல விஷயம் தான்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் சீரியல் குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அனைவரும் எதற்காக திடீரென இப்படி கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள் என்று சந்தேகத்துடன் கேள்வி எழுந்த நிலையில் தற்போது அது குறித்து விளக்கம் கிடைத்திருக்கிறது. 500 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதால் சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியல் சுமார் ஏழு வருடங்களுக்கும் மேலாக ஓடிய நிலையில் எதிர்நீச்சல் சீரியலும் அது போல் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment