விக்ரமனுக்கு மாலை மரியாதை போட்டு பெருமை படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி.! ஓரமாக அமர்ந்து இருந்த அசீம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் வெற்றியாளர் அசீமை விட்டுவிட்டு இரண்டாம் இடம் பிடித்த விக்ரமனை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி 105 நாட்களை முடிந்து சமீபத்தில் நிறைவடைந்து இருந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக நடிகர் அசீம் அறிவிக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஷிவின் அல்லது விக்ரமன் தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சக மனிதனை மனிதனாக மதிக்க தெரியாமல் ஒருமையில் பேசுவதும், அவர்களை தரக் குறைவாக பேசுவதும், பின்னர் சென்று சாரி கேட்பதுமாக வைத்திருந்தார் அசீம். இதனால் பலமுறை அவர் நாமினேட்டும் செய்யப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரமனுக்கு மாலை மரியாதை போட்டு பெருமை படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி.! ஓரமாக அமர்ந்து இருந்த அசீம்.! 1
14 வாரம் தொடர்ந்து நாமினேஷனில் வந்த அசீம் வீட்டிலிருந்தவர்களாலேயே வெறுக்கப்பட்டார். இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர் அசீம் என்று சக போட்டியாளர்களே கமல் முன்பே கூறத் தொடங்கினர். இவருக்கும் விக்ரமனுக்கும் தான் மிகப்பெரிய போட்டி இருந்தது. விக்ரமன் டைட்டிலை வெல்வார் என்று பலர் எதிர்பார்த்து இருந்தனர். வெளியே வந்த பின்னர் விக்ரமன் தொடர்ந்து பேட்டிகளில் இது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிட்டது. எதை நாம் இந்த சமூகத்தில் நிகழ்ந்துவிடக்கூடாது என்று நினைத்தோமோ அது தற்போது நிகழ்ந்து விட்டது. இவர் இப்படித்தான் இவர் கோபப்படுவார், அதை நாம் சகித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்பது இப்போது நார்மலைஸ் ஆகிவிட்டது என்று பேசியிருந்தார் இதற்கு பதிலடி கொடுத்து அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  அத்தையை கடத்தி வச்சி இருந்தது ஷீலா தான்..! உண்மைகளை போட்டு உடைத்த சக்தி.! வேற லெவல் ப்ரோமோ

விக்ரமனுக்கு மாலை மரியாதை போட்டு பெருமை படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி.! ஓரமாக அமர்ந்து இருந்த அசீம்.! 3
இதில் துப்புரவு பணியாளர்கள் பலரும் வந்து விக்ரமனுக்கு மாலை போட்ட மரியாதை செய்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. டைட்டில் வென்ற அசீமை விட்டுவிட்டு தற்போது விக்ரமனுக்கு மரியாதை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று அசீம் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். அந்த புரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment