சத்தீஸ்கரில் நிலக்கரி சத்தியாகிரகம்! குறுந்தொடர் 3

கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்துகொண்ட 59 நபர்களில் வெறும் 36 நபர்களே பாதிக்கப்பட்ட கிராமத்தை சார்ந்தவர்கள். அவர்களுள் துளசி நிஷாந்த் மற்றும் ராஜு பட்நாயக் ஆகியோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு சில நிமிடங்களே வழங்கப்பட்டு அவசர கோலத்தில் கருத்துகளை கேட்டுள்ளனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சுற்றுசூழல் மாசடைவது மற்றும் நிலம் இழப்புகள் குறித்து விவரித்துள்ளனர். “எங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை உரிமையாகும்” என்று நிஷாந்த் வாத்திட்டார்.

இதே போல் பேசிய பட்நாயக், “ஆயிரக்கணக்கான மக்களை வெளியே நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களை உள்ளே அனுமதித்து, அவர்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

கருத்து கேட்பு கூட்டத்தில், ஒருவரே இரண்டு முறை தனது கருத்துக்களை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். டோலசரா கிராமத்தை சார்ந்த சுரேஷ் குமார் 2வது மற்றும் 48வது நபராகவும் பேசியுள்ளார். கருத்து கேட்கும் போது, இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 14 கிராமங்களில் 8 ஊர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கூட்டத்தில் சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தேறியதாக “தி வையர்” நிறுவனத்தின் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சுரங்க திட்டத்திற்கு ஆதரவாக ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள துண்டு சீட்டை படித்து, ஒப்புவித்து இருக்கிறார்கள். 

சத்தீஸ்கரில் நிலக்கரி சத்தியாகிரகம்! குறுந்தொடர் 3 1

ஆதரவாகப் பேசியவர்களில்சிலர், கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்போடு செயல்படுகின்றன. கிராமத்தில் தொடக்கப் பள்ளிகள் உருவாக்குவதோடு, சுகாதார வசதிகள் மற்றும் பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவற்றை மேம்படுத்த காப்ரேட் நிறுவங்கள் உறுதியுடன் செயல்படும் என கூறியுள்ளனர்.

வெறும் 57 பேர் மட்டுமே கலந்துக்கொண்ட இந்த கூட்டத்தில், 1000 பேர் கலந்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சர்ச்சைக்குரிய எண்ணிக்கையை சுட்டி காட்டி பேசிய அகர்வால் ”30 முதல் 40 நபர்கள் மட்டுமே கலந்துக்கொண்ட கூட்டத்தில் பங்கெடுத்தனர். ஆனால் இந்த திட்டத்தை எதிர்க்கும் ஆயிரமானோர் கூட்டத்திற்கு வெளியே நின்று, இத்திட்டத்தை எதிர்த்துள்ளனர்.  இது மிக பெரிய முறைகேடு என அவர் குற்றசாட்டியுள்ளார்.

தற்போது இந்த சர்ச்சை பூதமாக மாறியிருப்பதால், கிராமத்து மக்கள் சுற்றுசூழல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகத்திடம் புகார் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல், இதனை நிதிமன்றத்திடமும் கொண்டு சென்று முறையிடவும் தயாராக இருக்கிறார்கள். எனவே இங்கு மற்றோரு நிலக்கரி திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று அக்கிராமத்தின் இளைஞரான ஹரிஹர படேல் தெரிவித்துள்ளார்.

நன்றி: தி வயர்
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்