சத்தீஸ்கர் நிலக்கரி சத்தியாகிரகம்! குறுந்தொடர் 2

நிலக்கரி சத்தியாகிரகம் குறித்து ஊடக விசாணையை மேற்கொண்ட “தி வயர்” நிறுவனம், இது குறித்து பல்வேறு தகவல்களை தந்துள்ளது. இது உங்கள் பார்வைக்கு

மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு மூன்றாம் முறையாக நிறுவங்கள் சார்பில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 14 கிராமங்களை சார்ந்த 5000 பேர் கூட்டம் நடைபெற்ற இடத்தில் கூடி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். 

விளம்பரம்

மக்களின் கருத்து என்ன?

“கூட்டத்தில் யாரும் பங்கேற்க கூடாது என்பதே எங்களின் நோக்கம். இதனை உறுதி செய்யவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம். ஆனால் அதானி நிறுவனம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சிலரை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள செய்துள்ளனர். ஆனால் அவர்கள் யார்? எந்த கிராமத்தை சார்ந்தவர்கள்? என்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியவில்லை.”

சரஸ்மா கிராமத்தில் வசிக்கும் ஷிவ்பால் பகத் கூறியுள்ளார்.

மக்களின் நிலங்கள் அரசு நிறுவனங்களுக்கு சொந்தமாக இருப்பினும், அதனை தனியார் நிறுவனங்கள் தான் மேலாண்மை வருகிறது. இங்குள்ள மக்கள் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், சுரங்கத்திற்கான அனுமதி ஒப்புதல்களை அவர்களாகவே தயாரித்துக்கொள்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் ராஜேஷ் திரிபாதி குற்றச்சாட்ட்டியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கட்டண உயர்வு! ஜியோவின் அதிரடி முடிவு!!

மேலும் பேசிய அவர், கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் மஹாராஷ்டிரா மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளே இருந்தனர். தம்னார் சுரங்கமானது பல்வேறு நிறுவனங்களால் நிறுவகிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலங்கள் மக்களின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான மறுவாழ்வு பணிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அதேபோல, சுற்றுசூழலை மாசுபடுத்தி சுகாதார பிரச்சனைகளை உருவாக்கியுள்ளனர். வாக்குறுதி அளித்தபடி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. நிலக்கரி சுரங்கத்தால் மக்களுக்கு எந்தவிதமான வளர்ச்சியும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் நிலக்கரி சத்தியாகிரகம்! குறுந்தொடர் 2 1

இந்திய அரசியலமைப்பின் 5வது அட்டவணையின் கீழ், இங்குள்ள மக்கள் பழங்குடியினராக இருப்பதால், அரசியலமைப்பு பாதுகாப்பு அரணாக இருக்கிறது. பொதுவாக நிலம் கையகப்படுத்தும் முன்னர், சமூக தாக்க மதிப்பீடுகளை நிறுவனங்கள் மேற்கொண்டியிருக்க வேண்டும். ஆனால் அதனை கூட அவர்கள் செய்யவில்லை.

கோல்ட்மேன்” சுற்றுச்சூழல் பரிசு பெற்ற ரமேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதேபோல, பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, அதில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை பதிவு செய்யவேண்டும். இது, சுரங்கம் தொடங்குவதற்கான சுற்றுசூழல் பாதிப்பின்மை சான்றிதழ் பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது. 

விளம்பரம்
தொடர்புடையவை  காஷ்மீர் சுற்றுலா பாதிப்பு: வேலையிழக்கும் 1.45 இலட்சம் மக்கள்

இதன் பிறகு சுற்றுசூழல்பாதிப்பு மதிப்பீடு ஆவணங்கள் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF) நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இக்குழு தான் திட்டத்திற்கு அனுமதி வழங்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்.

ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், பங்குபெறுவர்கள் பெரும்பாலும்  தனியார் மற்றும் அரசுசார் நிறுவங்களின் அதிகாரிகளாகவே இருகின்றனர். 59 பேர் கலந்துக்கொண்ட கூட்டத்தில் 57 பேர் திட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இவர்கள் தம்னாரில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர்.

விளம்பரம்

இந்நிலையில், சுமார் 3000கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து இருக்கும் போது, வெறும் 57 பேர்களின் ஆதரவினால் மக்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள் என எப்படி சொல்ல முடியும்? என சமூக ஆர்வலர் சவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment