
சூர்யா நடிக்கும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று உருவாகி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக பட்ஜெட் விமானத்தை உருவாக்கி இயக்கிய ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி கொண்டிருக்கும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் நிச்சயமாக திரையரங்கில் தான் முதலில் வெளியாகும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். ரசிகர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நடிகர் சூர்யா, சூரரை போற்று படம் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று என பெருமிதமாக கூறினார்.இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்தால் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்றும் வேறு எதிலும் கிடைக்காது என்றும் சுட்டிக்காட்டிய சூர்யா, சூரரைப்போற்று படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகிய பின்பு தான், ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று உறுதியுடன் கூறுகிறார்.