ஸ்ருதிஹாசன் ரீமேக் படத்துல நடிக்கிறாராம்!!

ஸ்ருதிஹாசன் ரீமேக் படத்துல நடிக்கிறாராம்!! 1

1978-ல் ருத்ரய்யா இயக்கி வெளிவந்த அவள் அப்படிதான் என்ற படம் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்போது வரை இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம், படத்தில் வரும் கருத்துக்கள் தான். மேலும் திரையுலகில் முன்னணி இயக்குநர்கள் பல பேர் கூட இந்தப் படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர்.

இதனையடுத்து இந்த படத்தை மீண்டும் திரையுலகிற்கு கொண்டு வர ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார் இயக்குநர் பத்ரி. இவர் சமீபத்தில் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’என்ற படத்தை இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்து இயக்க முடிவு செய்துள்ளாராம். இதன் முதல்கட்டமாக தயாரிப்பாளர் முடிவாகிவிட்டாலும், உரிமை யாரிடம் உள்ளது என்ற குழப்பத்தில் உள்ளாராம் பத்ரி.

விளம்பரம்

நடிகை ஸ்ருதிஹாசன் ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், நடிகர் சிம்பு ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் , கமல் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைப்பது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீப்ரியா கதாபாத்திரம் ஸ்ருதிஹாசனுக்கு மட்டும் தான் என்று உறுதியாக கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment