பாலிவுட் இசை அமைப்பாளர் கொரோனாவால் மரணம்!!

பாலிவுட் இசை அமைப்பாளர் கொரோனாவால் மரணம்!! 1

சிறுநீரக கோளாறு காரணமாக பாலிவுட் இசை அமைப்பாளர் வாஜித் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இதையடுத்து இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார்.

பாலிவுட்டை சேர்ந்த இரட்டை இசை அமைப்பாளர்கள் சாஜித், வாஜித் கான் ஆகிய இருவருமே கிக், வாண்டட் தபங் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். இவர்களில் வாஜித் கான் பின்னணி பாடகராகவும் செயல்படுவார். 42 வயதான இவர் , சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு ஒரு சிறுநீரகம் செயலிழந்ததால், உடனே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

சிறிது காலம் தன் பணியைத் தொடர்ந்த அவர் சமீபத்தில் மீண்டும் சிறுநீரக பிரச்சனையால் பல்வேறு இடையூறுகளை சந்தித்தார், இந்த நிலையில் , திடீரென்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு முன்பாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தொடர்புடையவை  ஜெயிச்சிட்டோம் மாறா..! டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் அருள்நிதி..!

அவரது மறைவுக்கு அமிதாப் பச்சன், சல்மான் கான் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் கோலிவுட் இசை அமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment