Categories: சமூகம்

சூர்யா ரசிகர்கள் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கி முன்னுதாரணம்!!

வெளியிட்டது
சூர்யா ரசிகர்கள் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கி முன்னுதாரணம்!! 1

சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார், அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அ.தி.மு.க வின் முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் என்பவர் வைத்திருந்த பேனர் ஒன்று, அவர் மேல் விழுந்தது. அதில் தடுமாறிய சுபஸ்ரீ ரோட்டில் விழுந்ததால் அவரை தொடர்ந்து வந்த வந்த லாரி ஒன்று, அவர் மேல் ஏறி இறங்கியது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த பிரச்சனை , தற்போது பரபரப்பாகி இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு பேனர், கட்-அவுட் வைக்கக் கூடாது என்று தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தி வருகின்றன.

இதனையடுத்து நெல்லையில், போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருக்கும் அர்ஜுன் சரவணன், சினிமா பிரபலங்களின் ரசிகர்கள், பிரபலங்களின் படம் வெளியிடப்படும் நாளில் கட்-அவுட், பேனர்கள் வைப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, அன்றைய நாளில் சாலை போக்குவரத்தால் விபத்து ஏற்படாமல் இருக்க டூ-வீலர் வைத்திருக்கும் நபர்களுக்கு தங்களால் முடிந்த அளவு செலவில் ஹெல்மெட் வாங்கிக் கொடுத்து விபத்து ஏற்படுவதை குறைக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதன் காரணமாக நெல்லை மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர்கள் மற்றும் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், நடிகர் சூர்யா தொடர்பாக எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அன்றைய தினம், இரு நூறு பேருக்கு ஹெல்மெட் வழங்குகிறோம் என கூறியுள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்