Categories: உலகம்

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்தன!!

வெளியிட்டது
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்தன!! 1

அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பூமியில் இருக்கும் உப்பு ஏரிகளைப் போல் செவ்வாய் கிரகத்தில் பல வருடங்களுக்கு முன்பு இருந்ததாக ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நாசா 2012 ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் உள்ள இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான பாறைப் படுகையை ஆய்வு செய்து வந்தது. மேலும் அது 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது. அந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்ததாகவும் அது பூமியில் உள்ளதைப்போல் வட்டமாகவும் அந்த இடம் ஈரப்பதத்துடன் இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீீீீண்ட காலமாக வறண்டு கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியதாக மாறிவிட்டதால் அங்குள்ள திரவ நீர் ஆவியாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவை அனைத்தும் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட  கட்டுரையில் இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டது. டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியர் மரரியன் நாச்சன் அவர்கள் கூறியதாவது

“புவியியல் நிலப்பரப்புகள் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளன, மேலும் ஆய்வுகள் கேல் க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ்வின் முக்கிய அங்கமாகும், வறண்ட  காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின. இந்த ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல்வது கடினம், ஆனால் கேல் க்ரேட்டரில் உள்ள ஏரி நீண்ட காலமாக இருந்தது. குறைந்தது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரை இருந்துள்ளன”.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்