Categories: சினிமா

திருமணத்திற்கு தயாராகும் த்ரிஷா! திரிஷாவின் அதிரடி முடிவு!!

வெளியிட்டது
திருமணத்திற்கு தயாராகும் த்ரிஷா! திரிஷாவின் அதிரடி முடிவு!! 1

திருமணம் என்று சொன்னாலே அந்த சொல்லை கேட்டு நடிகை த்ரிஷா வெறுப்பாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடித்த 96 திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக இருந்தது.
மேலும் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை, பரமபத விளையாட்டு, சுகர், 1818 என வரிசையாக பல படங்களை வைத்துள்ளாராம் இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது ஸ்கெடுல் செம பிஸி.

ஆனால் த்ரிஷாவின் அம்மாவுக்கு, தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்பது எண்ணமாக இருந்தாலும், இதனால் அவர் த்ரிஷாவிடம் இதுகுறித்து அவ்வப்போது பேசி வருகிறாராம். ஆனால் த்ரிஷாவோ திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்பாகி காதை பொத்திக் கொள்கிறாராம். .

வருண் மணியன், ரானா டகுபடி என ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், திருமணத்தை வெறுக்க வைத்துவிட்டதாம். திருமணம் செய்து கொள்ளும் யோசனையும் இப்போதைக்கு இல்லை என்று தனது தாயாரிடம் கூறி வருகிறாராம் த்ரிஷா. இதனால் அவரது அம்மா வருத்தத்தில் உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்