தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் இன்னிங்சில் இந்தியா அணி 507 ரன்களை குவித்து டிக்ளேர் செய்திருந்தது. இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்ரிக்கா அணி ஆட்டத்தின் 3ஆம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம் 1

2ஆம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பில் 39 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டத்தில் எல்கர் – டு பிளெஸ்ஸிஸ்  கூட்டணி நிதானமான போக்கை கடைபிடித்தனர். சுழற்பந்து வீச்சாளர்களின் திட்டங்களை அறிந்து செயல்பட்டதால், அணியின் ரன் எண்ணிக்கை சீரான வேகத்தில் ஏறியது.

உணவு இடைவெளிக்கு பிறகு, இக்கூட்டணியை அஸ்வின் பிரித்தார். 55 ரங்களில் டு பிளெஸ்ஸிஸ் வெளியேற, அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சத்தத்தை பூர்த்தி செய்தார் எல்கர். இதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி காக் சதமடிக்க அணியின் ஸ்கோர் 350ஐ தாண்டியது. இறுதியாக டி காக் அஸ்வின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்களை எடுத்துள்ளது.

இப்போட்டியில், அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 மற்றும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்