தெர்மாகோல் வீடுகள்….

வெளியிட்டது

தெர்மாகோல் வீடுகள்….

சமீபகாலமாக தெர்மாகோல் வீடு கட்டுவது நம் தமிழ்நாட்டில் பிரபலமாகி வருகிறது. இந்த தொழில் நுட்பம் நமக்குப் புதியதல்ல. 1960கள் ஆண்டுகளிலிருந்து இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளது.

தெர்மாகோல் வீடு உருவாக்கப்படும் முறை:

இந்த வீட்டை உருவாக்க மூலப் பொருளாக இருப்பது பிளாஸ்டரிங் என்னும் கலவை.
இதற்கு முதலில் நம் நிலத்தின் மண்ணையும் நீரையும் பரிசோதிக்க வேண்டும்.
அந்த நிலத்தில் எத்தனை அடி அஸ்திவாரம் போட வேண்டும் என்று பொறியாளர்கள் மூலம்
வீட்டின் அளவுகளுக்கு ஏற்ப தெர்மாகோல் மற்றும் வெல்டு செய்யப்பட்ட கம்பிகளால் ஆன சட்டமும் தனியாக தயார் செய்து அதை பேனல்கள் ஆக உருவாக்குவார்கள். பின்னர் அந்த பேனல்களை வைத்து கம்பிகளோடு அஸ்திவாரம் போடுவார்கள். கான்கிரீட் மணல் சிமெண்ட் சேர்ந்த கலவை தான் பிளாஸ்டரிங். தெர்மாகோல் பேனல்களின் மேல் பகுதிகளில் சூடான காற்றை தரும் இயந்திரத்தை வைத்து லேசாக உருக்கி அதன் மேல் இந்த பிளாஸ்டரிங்கை ஸ்பிரே பண்ணுவார்கள். பின்னர் இந்த பிளாஸ்டரிங்கை இரண்டு லேயர் அடித்தவுடன் சுவர் தயாராகும்.

தெர்மாகோல் வீடுகளின் சிறப்பம்சங்கள்:

தெர்மாகோல் வீடுகளின் சுவரின் அகலம் 6 இன்ச் மட்டுமே.தெர்மாகோல் வீடுகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.இவ்வகை வீடுகளை கட்ட ஆகும் காலம் குறைவு விலையும் குறைவு. இவ்வகை வீடுகள் 12 நியூட்டன் பிரஷரை தாங்கும். பூகம்பங்கள் அதிகமாக வரும் நாடுகளில் இவ்வகை வீடுகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. வெயில் காலங்களில் வீட்டினுள் வெப்பமாக இருக்காது. தண்ணீர் கசிந்து மற்றும் சுவர் அரித்தல் ஏற்படாது.
கம்பிகளில் முலாம் பூசப்பட்டு இருப்பதால் துரு பிடிக்காது.

தெர்மாகோல் வீடுகளின் குறைபாடுகள்:

சுவற்றில் ஆணி அடிக்க வேண்டும் என்றால் ஒரு இஞ்சுக்கு மேல் அடிக்க முடியாது.ஏசி மாட்ட வேண்டும் என்றாலும் அதற்கு முன்னதாகவே வீடு கட்டும்போது திட்டமிட வேண்டும். அதேபோல வீடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட வீடுகட்டும் செலவு ஆகும். அந்த வீட்டில் நாமாக எந்த மாற்றமும் செய்ய முடியாது.

வெளியிட்டது

புதிய செய்திகள்