தொலைப்பேசிகளுக்கான மனிதனைப் போன்ற “செயற்கை தோல்” கண்டுபிடிப்பு!!

தொலைப்பேசிகளுக்கான மனிதனைப் போன்ற "செயற்கை தோல்" கண்டுபிடிப்பு!! 1

ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய இடைமுகப்பை (இன்டர்பேஸ்) உருவாக்கயுள்ளனர். இது தொலைப்பேசிகள், கணினிகள் ஆகியவை மனிதர்களின் தோலைப் போல் கூச்சம், கசக்குதல், முறுக்குதல் மற்றும் கிள்ளுதல் போன்ற உணர்வுகளை உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த “ஸ்கின்-ஆன்” இடைமுகப்பு, மனித தோலை தோற்றத்தில் பிரதிபலிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த “ஸ்கின்-ஆன்” இடைமுகப்பின் தொடு சைகைகள் மனிதர்களுடனோ அல்லது மெய்நிகர்(வர்சுவல்) கதாபாத்திரங்களுடனோ கணினி மத்தியஸ்த தொடர்புக்கு வெளிப்படையான செய்திகளை எவ்வாறு தெரிவிக்க முடியும் என்பதை நிரூபிக்க போன் கேஸ், கணினி டச் பேட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை உருவாக்கினர். மேலும் அந்த செயற்கை தோலை கூசுவதன் மூலம் சிரிக்கும் ஈமோஜியை உருவாக்கும். தட்டினால் ஆச்சரியமான ஈமோஜியை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். பிரான்சில் உள்ள டெலிகாம் பாரிஸ்டெக்கின் மார்க் டெய்சியர் என்ற இந்த ஆய்வின் முன்னணி ஆசிரியர் அவர்கள் கூறியதாவது

விளம்பரம்

“ஸ்மார்ட் போன்களின் முக்கியமான பயன்பாடு குரல், வீடியோ, மெசேஜ் மூலமாக தொடர்பு கொள்ளவது தான். பயனர்கள் செயற்கை தோலில் தொட்டுணரக்கூடிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தியிடல் பயன்பாட்டை நாங்கள் செயல்படுத்தினோம். தொடுதலின் தீவிரம் ஈமோஜிகளின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அந்த செயற்கை தோலை அழுத்தமாக பிடித்தால் கோபமுள்ள ஈமோஜியை உருவாக்கும். கூசுவதன் மூலம் சிரிக்கும் ஈமோஜியை உருவாக்கும்.”

இந்த ஆய்வை அக்டோபர் 20 முதல் 23 வரை அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவிருக்கும் 32 வது ஏசிஎம் பயனர் இடைமுக மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சிம்போசியத்தில் வழங்கப்போவதாக கூறுகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment