
கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த நடிகர் சங்கத தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது . இந்நிலையில் நேற்று இந்த வழக்கானது நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் வாதாடினார்.
அப்போது அவர் பேசுகையில் , கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பதவி காலம் முடிந்த பிறகும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என்று விஷால் தரப்பில் வாதிட்டார்.மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது என்றும் கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காத நிலையில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருக்க வாய்புகள் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில் உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார்.