மாணவர்கள் மகிழ்ச்சி! பள்ளிகளுக்கு விடுமுறை!!

மாணவர்கள் மகிழ்ச்சி! பள்ளிகளுக்கு விடுமுறை!! 1

வரும் 17ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அதன் முன்னோட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் நலத்தை கருத்தில் கொண்டு , புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார். மேலும் மாணவ, மாணவிகளில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. பருவ மழை தொடங்க இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் மழையின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment