Categories: சினிமா

நம்ம வீட்டு பிள்ளை வெளியிடும் தேதி அறிவிப்பு! சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!

வெளியிட்டது
நம்ம வீட்டு பிள்ளை வெளியிடும் தேதி அறிவிப்பு! சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு!! 1

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் நம்ம வீட்டுப்பிள்ளை படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.குடும்பக் கதையை மய்யமாக கொண்டு அண்ணன் தங்கை பாசத்தை வைத்து இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து குடும்பமாக நடித்துள்ளனர்.

இதனை அடுத்து , இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது இதன்படி, வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது . மேலும், குடும்பத்தோடு பார்க்க வேண்டிய சிறந்த பொழுதுபோக்கு படம் என்றும், இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிட்டுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்தைத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறார். இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை அடைந்தது . இதன் காராணமாக, எப்படியாவது அடுத்த படத்தில் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், இப்படத்திற்காக கடுமையான உழைப்பை எடுத்துள்ளாராம்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்