பாகுபலி எல்லாம் ஒரு படமா? அது வெறும் கற்பனை.! வெளுத்து வாங்கும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளியானது பாகுபலி திரைப்படம். இது இரண்டு பாகங்களாக வெளியாகி இருந்தது. படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என்று பலரும் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழிலும் மிகப்பெரிய வசூலை குவித்து இருந்தது. மேலும் பான் இந்தியா மூவியாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவித்து இருந்தது. பிறகு மீண்டும் ஆர்ஆர்ஆர் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய சினிமாவில் இந்த இரண்டு படங்களும் சாதனை படங்களாக இருந்தது.்அதை முறியடிக்கும் விதமாக தமிழில் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாகுபலி எல்லாம் ஒரு படமா? அது வெறும் கற்பனை.! வெளுத்து வாங்கும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் 1

விளம்பரம்

 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பாகுபலி ஒரு கற்பனை கதையாகும். கற்பனையான அரசர்களை மையப்படுத்தி அந்த கதையை இயக்கி இருந்தார் ராஜமவுலி. ஆனால் பொன்னியின் செல்வன் அப்படியல்ல. இது ஒரு வரலாற்று கதை. குறிப்பாக தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவராக இருந்த சோழ மன்னர்களை பற்றிய கதை ஆகும். ராஜராஜ சோழன் எவ்வாறு அரியணை ஏறினார். அதற்காக அவர் எவ்வளவு துயரங்களை சந்தித்தார் என்பதை விளக்கி கூறும் ஒரு நாவல் தான் பொன்னியின் செல்வன். இது மொத்தம் ஐந்து பாகங்களாக வெளியாகி இருக்கிறது. இதை படமாக்க பலர் முயற்சி செய்து தோற்ற பின்பு, மணிரத்தினம் தற்போது அதை சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "இப்படி வந்து மாட்டிகிட்டிங்களே அண்ணே"!!காபி அடித்த டியூனை கண்டுபிடித்த நெட்டிசன்!!நேக்காக பிளாக் செய்து எஸ்கேப் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார்.

பாகுபலி எல்லாம் ஒரு படமா? அது வெறும் கற்பனை.! வெளுத்து வாங்கும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் 3

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நகைகள் மற்றும் செட்டுகள் அனைத்தும் உண்மையாக போடப்பட்டவை. ஆனால் பாகுபலி படத்தில் பல செட்டுக்கள் அனிமேஷன் மற்றும் வி எப் எக்ஸ் எஃபெக்ட் மூலமாக எடுக்கப்பட்டவை. இதனால் பாகுபலியை காட்டிலும் பொன்னியின் செல்வன் படமே உயர்ந்து நிற்கிறது. தற்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரிடம் கேட்கப்பட்டபோது பாகுபலி தயவுசெய்து பொன்னியின் செல்வன் உடன் ஒப்பிடாதீர்கள். அது வேறு இது வேறு, அது கற்பனை கதை இது உண்மையான தமிழர்களின் வரலாறு என்று கொந்தளிப்புடன் பேசினர். அவர் பேசிய அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment