1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை குஷ்பூ. 1989 ஆம் ஆண்டு “வருஷம் 16” என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

தற்போது அவர் தனது கணவர் சுந்தர் சி யின் தயாரிப்பில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்னும் திரைப்படத்தையும் தனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் மூலமாகவே தயாரித்திருக்கிறார். தற்போது குஷ்பூ தனது மகள் அவந்திகாவின் பிறந்த 22 ஆவது பிறந்த நாளை ஒட்டி பழைய அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். குஷ்பூ சுந்தர் சி தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவரின் மூத்த மகள் அவந்திகா லண்டனில் உள்ள ஒரு நடிப்பு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தற்போது படிப்பை முடித்து விட்டார். விரைவில் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக குஷ்பூ தனது ஒரு பதிவில் தெரிவித்து இருந்தார்.


தற்போது அவந்திகாவின் 22 வது பிறந்த நாளை ஒட்டி குஷ்பூ அவரின் குழந்தை பருவத்தின் புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். அதில் 22 வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் வந்து வாழ்க்கையை அழகாக்கினாய், 22 வருடங்களுக்குப் பிறகும் நீ அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாய். நீ முதன்முதலாக அழுதது இன்று வரை என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்ததும் நீதான், நீ வெகு தொலைவில் இருப்பதால் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறோம். ஐ லவ் யூ பேபி என்று பதிவிட்டு இருக்கிறார்.

