Categories: அரசியல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அமைச்சரவை! தேதி அறிவிக்கப்படுமா!!

வெளியிட்டது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அமைச்சரவை! தேதி அறிவிக்கப்படுமா!! 1

தூண்களில் முதல் மற்றும் முக்கிய தூணாக விளங்குகிறது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டபேரவைகள். இங்கு தான் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏ.,க்கள் நாட்டுக்கு தேவையான சட்டங்களையும், பொதுமக்கள் நலனுக்கான திட்டங்களையும் உருவாக்கின்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் குழு கூடி, சட்டத் திட்டங்களை நிறைவேற்ற ஏற்றார் போல , நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூடுகிறது. அதாவது பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என்று மூன்று கூட்டத்தொடர்கள் நடைபெறும்.இதில் நடப்பாண்டில் பட்ஜெட், மழைக்கால கூட்டதொடர் ஏற்கெனவே முடிவடைந்துவிட்ட நிலையில் அவற்றின் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான தேதியை உறுதி செய்வதற்கான, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பாதுகாப்பு துறையில் உள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை, நவம்பர் 18 -ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13- ஆம் தேதி வரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி, அருண் ராம் மேக்வால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 -ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் வீடுகளில் தொடரும் ரெய்டுகள் என பல்வேறு விவகாரங்கள், அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்