குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது தேசிய குடியுரிமை திருத்த மசோதா. சுமார் 12க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் திவிராமடைந்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் 144 தடை உத்தரவு, மொபைல் மற்றும் இணைய சேவை துண்டிப்பு போன்ற அடக்குமுறை செயல்களில் அரசாங்கம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய செயல்கள் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

இன்று, கர்நாடகா மாநிலம் பெங்களூர், மங்களூர் போன்ற நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து வந்தது. போராட்டம் கலவரமாக மாறவே நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூவர் பலியாகியுள்ளதாகவும், மேலும் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே போல, லக்னவ் நகரில் நடைபெற்ற போராட்டத்திலும் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. அதிலும் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.