Categories: சமூகம்

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ..!

வெளியிட்டது
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ..! 1

நவராத்திரி பண்டிகையையொட்டி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 6 கோயில்களிலும் 11 ரெயில் நிலையங்களிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையை பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்த உள்ளனர்.

மேலும் இந்தியாவுக்கு எதிராக போர் மிரட்டலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார்.

இந்தியாவை தாக்க பல பயங்கரவாதிகள் கஷ்மீரில் ஊடுருவ இருப்பதாகவும் குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதி வழியாக கடல் மார்கமாக இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த இயக்கத்தைச் சேர்ந்த மசூத் அகமது என்பவர் பெயரில் இந்தியில் எழுதப்பட்டு கையெழுத்திடப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்று கடந்த 14-ம் தேதியன்று அரியானா மாநிலம் ரோதக் ரயில் நிலையத்தின் சூப்பிரண்டுக்கு கிடைத்தது.

அதில் நவராத்திரி பண்டிகையான அக்டோபர் 8-ம் தேதியன்று தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேச, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மொத்தம் ஆறு கோவில்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை, ரேவரி, போபால், ஹிசார், கோடா, ஜெய்ப்பூர், இடார்சி, குரு சேத்திரா உள்பட 11 ரயில் நிலையங்களில் குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய கோவில்களில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. ரயில் நிலையங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்