நெற்றிக்கண் திரைபடத்தின் மூலம் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் !!

2011- ஆம் ஆண்டு வெளியானது ‘பிளைண்டு’ என்ற கொரியன் படம், இந்த படம் அதன் ரீமேக்காக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது இளைய தளபதி விஜய்யுடன் ’பிகில்’என்ற படத்திலும் , நடிகர் ரஜினிகாந்தின் ’தர்பார்’ என்ற படத்திலும் கடும் பிஸியாக உள்ளார். இவை இரண்டு படங்களை முடித்து விட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸின் முதல் தயாரிப்பு படத்தில் நடிக்கிறார். ‘நெற்றிக்கண்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, ’அவள்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில், நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

விளம்பரம்


’நெற்றிக்கண்’ படத்தில் கண்பார்வை இல்லாத பெண்ணாக நடிக்கும் நயன்தாராவுக்கும் ஒரு நாய்க்கும் அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மிலிசந்த் தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும் போது கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இது இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடையவை  வெளியான முதல் நாளே நல்ல வசூல்..! Mariselvaraj-ன் வாழை படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இதோ..!

இந்நிலையில் நெற்றிக்கண் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவுடன் எடுத்து கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன், ”திரும்பவும் ஒன்றாக படப்பிடிப்பை தொடங்குகிறோம். ஆனால் வித்தியாசமான ரோல்களில்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment