Categories: சமூகம்

படைப்பு நகரங்களின் பட்டியலில் மும்பை, ஹைதராபாத்!

வெளியிட்டது
படைப்பு நகரங்களின் பட்டியலில் மும்பை, ஹைதராபாத்! 1

யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) கடந்த வியாழக்கிழமை அன்று அறிவித்த படைப்பு நகரங்களாக நியமிக்கப்பட்ட 66 நகர்ப்புறங்களில் இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

யுனெஸ்கோ திரைப்பட உலகில் அதன் பங்களிப்பை அளித்ததற்காக மும்பை நகரத்தையும் சமைக்கும் கலைக்காகவும் (காஸ்ட்ரோனமி) ஹைதராபாத் நகரத்தையும் படைப்பு நகரங்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அக்டோபர் 31ம் தேதியன்று உலக நகரங்களின் நாள் அதனைக் கொண்டாடும் வகையில் யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 246 உறுப்பினர்களின் அமைப்பின் படைப்பு நகரங்களின் நெட்வொர்கில் இந்தியாவின் 2 நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இசை, கலை மற்றும் நாட்டுப்புற கைவினைப்பொருட்கள், வடிவமைப்பு, சினிமா, இலக்கியம், டிஜிட்டல் கலைகள் அல்லது காஸ்ட்ரோனமி போன்ற பிரிவுகளில் சிறந்து விளங்கும் அல்லது பங்களிக்கும் நகரங்கள் அங்கீகரிக்கப்படும்.

யுனெஸ்கோவின் இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அசெளலே அவர்கள் கூறியதாவது

“உலகெங்கிலும், இந்த நகரங்கள் ஒவ்வொன்றும் அதன் வழியில் கலாச்சாரத்தை தூணாக ஆக்குகின்றன. இது அரசியல் மற்றும் சமூக கண்டுபிடிப்புகளுக்கு சாதகமானது மற்றும் இளம் தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமானது.”

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்