பலாத்காரமே முதல் பாலிய உறவாக அமைகிறது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான பெண்களுக்கு பாலியல் பலாத்காரமே தங்கள் முதல் பாலியல் உறவாக அமைந்தது என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 18 முதல் 44 வயதுடைய பெண்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜமா இன்டர்னல் மெடிசினில் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது பெரும்பாலானவர்கள் இளம் பருவத்தினராக இருந்தனர் என்று கண்டறியப்பட்டது. முதல் முறையாக தானாக முன்வந்து உடலுறவு கொண்ட பெண்களை விட இந்த பெண்கள் மோசமான சுகாதார விளைவுகளை நீண்டகாலம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது மிகவும் ஆபத்தானது. இந்த ஆய்வு பனிப்பாறையின் நுனி மட்டுமே. ஏனெனில் இந்த ஆய்வில் 18 முதல் 44 வயதுடைய பெண்கள் மட்டுமே உள்ளனர்” என்று எழுத்தாளரும், கேம்பிரிட்ஜ் ஹெல்த் அலையன்ஸில் ஆராய்ச்சியாளருமான டாக்டர் லாரா ஹாக்ஸ் தெரிவித்துள்ளார்.

“அனைத்து வயது பெண்களிடமும் ஆய்வை மேற்கொண்டால், எண்ணிக்கை பல மில்லியன்கள் அதிகமாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்யலாம்.”

பலாத்காரமே முதல் பாலிய உறவாக அமைகிறது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 1
A survey of women aged 18-44 finds that for an estimated 3.3 million women in that age group, their first sexual experience was rape. Researchers say if the numbers included all women they’d be much higher.

மேலும், கூறுகையில் #MeToo இயக்கம் தொடங்கப்பட்டதற்கு முன்பு சேகரிக்கப்பட்டது ஆய்வு தகவலாக இது இருப்பதனால் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்த ஆய்வு பாலியல் வன்முறையைச் சார்ந்த திறந்த உரையாடல்களுக்கு வழிவகுக்கிறது என்றார்.

தங்களது பழைய பாலியல் வன்முறை தொடர்பான அனுபவங்களை அடையாளம் காணுவதை, இன்று பெரும்பான்மையான பெண்கள் எளிமையாக உணரலாம்

தேசிய குடும்ப வளர்ச்சி என்னும் தலைப்பில் சென்டர் பார் டிசீஸ் அண்ட் ப்ரிவென்ஷன் நடத்திய ஆய்வில், 18 முதல் 44 வயதுடைய பெண்களிடம், அவர்களுடைய முதல் பாலியல் உடலுறவு அனுபவம், அப்போது அவர்களுடைய வயது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அமெரிக்காவின் தேசிய அளவில், பாலியல் வன்புணர்வே ஒரு பெண்ணின் முதல் உறவு சார்ந்த அனுபவமாக இருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை சுமார் 6.5 சதவிகிதம் என இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 15 வயதிலே பெண்கள் பாலியல் வன்முறைகளை சந்திக்கின்றனர். இதே போல் வன்புணர்வு செய்யும் ஆண்களின் வயது சராசரியாக 27 வயதாக இருக்கிறது. இது உணர்வின் அடிப்படையிலும், உடலின் அடிப்படையிலும் முரண்பாடுகளை காட்டுவதாக என ஹாக்ஸின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இதில், 26 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் உடல் ரீதியான அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும், 46 சதவிகிதம் பெண்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 56 சதவிகிதம் பெண்கள் உடலுறவு கொள்ளும் படி வார்த்தைகளாலும், 16 சதவிகிதமானோர் உடலுறவு கொள்ளாவிட்டால் உறவை துண்டித்துக்கொள்ளும் படி தங்களது துணைவர்களால் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

தேவையற்ற அல்லது இணக்கம் இல்லாத எந்த ஒரு பாலியல் உறவும் வன்புணர்வு என்றே வரையறுக்கப்படும்.ஒரு பெண் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்படும்போது அல்லது ​​அவள் விரும்பாத ஒன்றாக இருக்கும் போது அவை பாலியல் பலாத்காரம் என்று கருதப்படுகிறது.

இந்த உணர்ச்சி சார்ந்த அனுபவங்களும், அழுத்தங்களும் நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானவை. மேலும் இந்த ஆய்வினை பற்றி கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் அலிசன் ஹுவாங் கூறும்போது, “கட்டாய உடலுறவின் விளைவாக ஏற்படும் பாலியல் அதிர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது” என்கிறார்.

இன்னும் சில நேரங்களில், வாய்மொழியாக வலுக்கட்டாய உறவுக்கு இழுக்கப்படும் பெண்கள் அதிக அளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் உணர்வு ரீதியாக அதிர்ச்சியடைகிறார்கள். அவர்களின் அனுபவங்களை மற்றவர்கள் அங்கீகரிக்கவில்லை, சிலர் அனுதாபத்துடன் அணுகுகிறார்கள் என்பதே இந்த தாக்கத்திற்கு முக்கிய காரணமாகவும்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான பாலியல் ஏற்றத்தாழ்வே வன்புணர்வுக்கு காரணியாக அமைகிறது.

விருப்பப்பட்டு உறவு கொண்ட பெண்களை விட வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களே அதிக அளவில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களது பணிகளை விரைந்து முடிப்பதில் மிக பெரிய சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், இப்பிரச்சனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது முதல் பாலியல் உறவாக வன்புணர்வை அனுபவித்து வருகிறார்கள். இது உடல்நிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். இது மிகப்பெரிய சுகாதாரம் சார்ந்த பிரச்சனையாக எழுந்துள்ளதாக ஹாக்ஸ் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் ரீட்டு சட்டார்ஜி
தமிழில் தமிழ்முரசு
நன்றி நேஷனல் பப்ளிக் ரேடியோ (NPR)

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்