Categories: சினிமா

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிர்ச்சி சிவா சொன்னா கவிதை! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்!!

வெளியிட்டது
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிர்ச்சி சிவா சொன்னா கவிதை! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்!! 1

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கிற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களில் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி நடித்துள்ளார். அதனை தொடர்ந்து விஜய் பிகில் படத்திலும் நடித்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையில் இப்படம் திரைக்கு வெளி வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழாவை தற்போது தாம்பரம் அருகில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் படக்குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். தளபதி விஜய்யின் 64ஆவது பட இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் இந்த விழாவில் கலந்து கொண்டார். 

இந்த விழாவை, மிர்ச்சி சிவா மற்றும் விஜே ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்ற நிலையில், இருவரது உரையாடலின் போது, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேவையில்லை. விஜய் எழுந்து கை காட்டினாலே கை தட்டுறாங்க என்ற சிவா, தனது கவிதை திறனை தற்போது வெளிக்காட்டியுள்ளார். இந்த கவிதையை விஜயை வைத்து கூறியுள்ளார்.

ஒரு ரசிகன் ஒரு தலைவனுக்காக அடிச்சா அது விசிலு, அதே ஒரு தலைவன் ரசிகனுக்காக அடிச்சா அது பிகிலு என்று கவிதையை தொடங்கி, பின்னர் , எப்படியெல்லாம் ஃபுட்பால் விளையாடனும் என்று தளபதி பிகில் சொல்லி கொடுத்திருக்காரு. எப்படியெல்லாம் கிரிக்கெட் விளையாடக்கூடாதுன்னு நாங்க சொல்லிக் கொடுத்தோம் என்று கூறி சிரிப்பலையில் அரங்கத்தை அதிரவைத்துள்ளார்.நேற்று இப்படத்தின் உனக்காக என்ற ரொமாண்டிக் மெலடி பாடல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு முன்னதாக சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாஸான ஒரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்