Categories: உலகம்

பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!

வெளியிட்டது
பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்! 1

பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சக வாஷிங்டன் மாநில குடியிருப்பாளருமான பில் கேட்ஸ் அவர்கள் மீண்டும் இந்த ஆண்டின் உலகத்தின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை இன்று இந்த ஆண்டிற்கான உலகத்தின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 105.7 பில்லியன் டாலர் ($105.7 bn) மதிப்புடைய சொத்துக்களைக் கொண்ட பில் கேட்ஸ் அவர்கள் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் ஏற்கனவே பில் கேட்ஸ் அவர்கள் 1987 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸின் முதல் பில்லியனர் பட்டியலில் அறிமுகமானார். அப்போது அவரின் நிகர மதிப்பு $1.25 பில்லியனாக இருந்தது. மேலும் அவர் 24 ஆண்டுகளாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2018ம் ஆண்டில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பேஜோஸ் அவர்கள் உலகத்தின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து பில் கேட்ஸை இரண்டாம் இடத்திற்குத் தள்ளினார். இப்போது இந்த ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலில் $103.9 பில்லியன் மதிப்புடைய சொத்துக்களைக் கொண்ட ஜெஃப் பேஜோஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்