பெரியார் ஈ.வே.ராமசாமி: அவரது அரசியலும், சமூக மரபின் திட்டமிடலும்!

ருபதாம் நூற்றாண்டின் பகுத்தறிவாளரும், திராவிட இனத்தின் சீர்திருத்தவாதியுமான, ஈ.வே.ராமசாமி அவர்கள், ‘பெரியார்’ என்றும் ‘பெரியவர்’ என்றும் பிரபலமாக பேசப்படுகிறார். செப்டம்பர் 17, 1879 இல் பிறந்த அவர், தாழ்த்தப்பட்டவர்களின் சம உரிமைகளுக்கும், பெண்களுக்கும் வாதாடினார். மேலும் இன்றைய சமூகத்தின் ‘சாதி அடையாளங்கள்’ தொடர்பான அரசியல் பிரச்சினைகளுக்கு இவரது வாதம் பொருத்தமானவை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ்நாட்டில் இயங்கம் பெற்ற முக்கிய அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் பெரியார் தலைமையிலான சமூக-அரசியல் இயக்கத்தின் வேர்களைக் கொண்டோ அல்லது அவற்றின் வெவ்வேறு புள்ளிகளில் அவரது சிந்தனையுடனோ பங்களித்துள்ளன. 

நவீன தமிழ் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் கருத்தியலில் அடித்தளங்களை பெரியார் அமைத்துக்கொடுத்தார் என்று சொல்வது பொருத்தனது. பெரியார் 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். குறிப்பாக அவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனும், மகாத்மா காந்தியுடனும் ஏற்பட்ட சுணுகத்திற்கு பிறகு இந்த இயக்கம் துடிப்பான சாதி எதிர்ப்பு, பிராமணரல்லாத சமூக இயக்கத்தின் மூலக்கல்லாக மாறியது. இப்பகுதி பல தசாப்தங்களாக சாட்சியாக இருந்து வருகிறது.

பெரியார் ஈ.வே.ராமசாமி: அவரது அரசியலும், சமூக மரபின் திட்டமிடலும்! 1
பெரியார் ஈ.வே.ராமசாமி

1973 டிசம்பரில் அவர் இறந்த உடன், “பொருளாதார மற்றும் அரசியல்” வார இதழில் பெரியருக்கான சிறப்பிதழ்வெளியிடப்பட்டது. அதில் அவரது பங்களிப்புகள் பன்மடங்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சமுதாயத்தில் இயங்கும், சாதி மற்றும் மதத்தின் அடையாளங்களின், அனைத்து வகையான பாரம்பரியத்திற்கும் எதிராக அவர் தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் அனைத்தும் சமூகத்தின் பழைய அமைப்புகளில் காணப்பட்ட பகுத்தறிவின்மையை அடிப்படையாகக் கொண்டது. மேலும், பெரியார் தனக்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டது இல்லை. இதன் மூலம் சாதி, மதத்தின் பொருள் மற்றும் கருத்தியல் கட்டமைப்புகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் பார்வையற்ற புள்ளிகளை அவரால் அம்பலப்படுத்த முடிந்தது.

அவரது அரசியல் இயக்கத்தின் நன்கு அறியப்பட்ட அம்சங்களைத் தவிர, பெண்களின் கேள்விக்கு தீவிரமாக, தொலைநோக்கு அணுகுமுறையில் முக்கியத்துவம் தந்தது முக்கியமானது. திருமணத்தில் பெண்களின் சம உரிமை, பரம்பரை சொத்தின் மீது உரிமை மற்றும் ஆண்களுக்கு நிகரான வாழ்க்கை ஆகியவற்றிற்காக பெரியார் தொடர்ந்து வாதிட்டார். 

1930 களின் முற்பகுதியில், பெண்களுக்கு கருத்தடை முறைகள் அணுகக்கூடியதாக கடுமையாக அவர் வாதிட்டார். எந்தவொரு மத அல்லது சமூக பழக்கவழக்கங்களும் இல்லாமல், பார்ப்பனர் முறையின்றி திருமண விழாக்களை அவர் சுயமரியாதை திருமணமாக மறுவடிவமைப்பு செய்தார். திருமணத்தில் இந்த மறுசீரமைப்பு ‘திருமணங்களில் மதச்சார்பினை துண்டிக்கப்படுவதற்கு’ எவ்வாறு வழிவகுத்தது என்பது குறித்து, பெண்ணியவாதிகள் வாதிட்டனர். இன்னும் தீவிரமாக, ஒரு பெண் தனது கணவரைத் தவிர வேறு ஆண்களை விரும்ப கூடாது என எந்த ஒரு வெறுப்பையும் அவள் மீது சுமத்தக்கூடாது என்று வாதிட்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், நவீனத்துவத்தின் சமூக-கலாச்சாரம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும், பெண்களுக்குமான சுதந்திரம், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை ஆகியவற்றைப் பாதுகாக்கும் என கூறிவந்தார்.

பெரியாரின் தத்துவ உரையாடல்கள், இந்தியாவின் நவீன சமூக சிந்தனைக்கு முக்கியத்துவம் பங்களிப்பு அளிப்பதாகும். ஒவ்வொரு தனிமனிதனும் தனக்காக சிந்திக்க வேண்டும் என்றும் பகுத்தறிவுடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பண்டைய கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் போலவே, விவாதங்களுக்கு பொது தளங்களை உருவாக்கி பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினார். அவர் 1944 இல் நிறுவிய அரசியல் அமைப்பான திராவிடர் கழகம் (அதுவரை அது நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்டது) இந்தி தேசியவாதிகளால் அரசியலால் ஒடுக்கப்பட்ட, மேலும் பார்பனீயத்தால் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியுள்ளது. பிற்காலத்தில் திராவிடர் கழகம் பல பிளவுகளைச் சந்தித்தது. மேலும், இருபெரும் முக்கிய கட்சியான திமுக மற்றும் அஇஅதிமுக இவ்இயக்கத்தின் மரபுரிமையைக் கோருகின்றன.

பெரியார் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளராக திகழ்ந்தார். அவரால் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுடனும் திறம்பட தொடர்பு கொள்ள முடிந்தது. பெரியருக்கும் காந்திக்கும் இடையில் ஏராளமான கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்ட விதம் அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்கியது. ஆரம்பத்தில், பெரியார் ஒத்துழையாமை இயத்தினாலும், காந்தியின் துடிப்பான பணிகளாலும், அவரது கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டார். ஆனால் அவர் அரசியல் மற்றும் அறிவுசார் மட்டங்களில் காந்தியுடன் ஆழமாக வேறுபடுகிறார். காந்தியுடனான பிணக்கத்திற்கு பின்னர் இந்திய தேசிய காங்கிரஸால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம், சுதந்திரத்தின் கருத்தியல் மயமாக்கல் போன்ற முறைகளில் பெரியாரின் வேறுபாடுகள் கூர்மையாக வளர்ந்தன.

‘ஒரு நாட்டின் குடிமக்கள் தங்கள் கண்ணியத்தை கைவிடவோ அல்லது சமரசம் செய்யவோ இல்லாமல், அவர்களின் இலட்சியத்தை உணர முடிந்தால் மட்டுமே தேசியவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும்’ என்று அவர் வாதிட்டார். 

“அறிவின் முழுமையான வளர்ச்சி, கல்வி பரவலாக்கல், பகுத்தறிவு சிந்தனை, வேலைவாய்ப்பு, தொழில், சமத்துவம், வறுமை, அநீதி மற்றும் தீண்டாமையை ஒழித்தல் போன்ற இலட்சியங்களே பெரியாரின் சுதந்திர தேசம் குறித்த கருத்தாடல்களாக இருந்தது என எழுத்தாளர் ‘வி.கீதா கூறுகிறார்.

ஆங்கிலத்தில் அர்ட்ரா, நிர்வாக ஆசிரியர், சாஹாபிடியா.
தமிழில் விடுதலை தமிழ்முரசு.
நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்