போராட்டம் ஓயாது: கமலஹாசன்

கொடுங்கோன்மை அடங்கும் வரை தனது போராட்டம் முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

போராட்டம் ஓயாது: கமலஹாசன் 1

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “குடியுரிமை சட்டத்திற்கு அடுத்தபடியாக குடியுரிமை பதிவேடு சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பண்பாட்டினை அழிக்க அதிகாரம் இல்லை. இதுபோன்ற கொடுங்கோன்மை அடங்கும் வரை எனது போராட்டம் ஓயாது. ஆவணங்களின் அடிப்படையில் ஒருவரின் முன்னுரை நிர்ணயம் செய்வது அவர்களை நீக்குவது தவறானது என கூறியுள்ளார்.

விளம்பரம்

முன்னதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment