திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் நிலைப்பாட்டினை ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும் தேடுதல் கள விதவிதமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர் கலவரங்கள் மற்றும் காவல்துறையின் கடுமையான அடக்குமுறை போன்றவைகள் போராட்டக்காரர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இவ்விவகாரத்து பொருத்தவரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் களத்தில் நின்று போராட வில்லை. அவர்கள் பெருமளவில் அறிக்கை மூலமாகவே சட்டத்திற்கு எதிராக எதிர்வினையை காட்டி வருகிறார்கள்.
ஆனால் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, பீகார் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும், தேசிய அளவில் புகழ்பெற்ற தேர்தல்களை ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஒரு பழம் பெரும் கட்சியாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறுவது தங்களது நிலைப்பாடாகும். ஆனால் அறிக்கை மட்டுமே போதாது. அறிக்கை எதனையும் நிலை நிறுத்தி விடாது” என களத்திற்கு வராத மூத்த காங்கிரஸ் தலைவர்களை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.