பீகாரில் மோசமாகும் குழந்தை தொழிலாளர் தடை சட்டம்!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பீகாரின் கயா மாவட்டத்தில் ஒரு குழந்தை கூட நன்மை அடையவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொது கொள்கை குறித்தான, ஆராய்ச்சி நிறுவனமான அக்கவுன்டபிலிட்டி இனியாஷியேட்டிவ், கயா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்திய ஆய்வில், பீகாரை குழந்தை கடத்தலின் மையமாக சுட்டி காட்டியுள்ளது.

விளம்பரம்
பீகாரில் மோசமாகும் குழந்தை தொழிலாளர் தடை சட்டம்! 1

இதனை தொடர்ந்து, பீகார் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜஸ்டிஸ் வென்ச்சர்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் கயா மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் ஆகியோரின் தகவலின் படி, இத்தனை ஆண்டுகளில், ஒரு குழந்தைக்கு கூட நிதியுதவி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதி ஒதுக்கப்பட்டு, தொடங்கப்பட்ட இத்திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வறுமையில் வாடும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது.

விளம்பரம்

சீதாமரி மாவட்டத்திலிருந்து சுமார் 200 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் எவையுமே அங்கீகரிக்கப்படவே இல்லை என ஆதிதி அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியிருக்கிறது. அதேபோல, பீகாரின் ஷியோஹர் பகுதியில், 2018 ஆம் ஆண்டில் 64 குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  சூறைக்காற்றுடன் வெளுக்க போகும் கனமழை! நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை!!

ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆர்வத்தை பொறுத்து அமைவதாக நிர்வாக இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் இத்திட்டம் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக, அதன் மக்கள் தொகை பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த குழந்தை தொழிலாளர்கள் சராசரி 30 சதவிகிதம். ஆனால் உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும் 32 சதவிகிதங்களாக இருக்கின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு ஆய்வினை மேற்கொண்ட யுனிசெப் அமைப்பு, பீகாரில் 10 கோடி குழந்தைகள் வேலைக்கு செல்வதாக தெரிவித்திருப்பதுதக்கது.

விளம்பரம்

Leave a Comment