Categories: சமூகம்

அரசு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது

மாற்று முறை ஆவண சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் அரசு விடுமுறைகள் தனியார் நிறுவங்களுக்கு பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார். இதனை தொடர்ந்து அவர்க்கு மரியாதையை வழக்கும் விதமாக மாற்று முறை சட்டத்தின் கீழ் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அன்று கிருஷ்னகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் நிறுவனம் (பி மெட்டல் பியரிங்க்ஸ்) ஊழியர்களை பணிக்கு வருமாறு அழைத்திருந்தது. ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அரசு விடுமுறையை காரணம் காட்டி பணிக்கு வராததால், ஒரு நாள் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து தனியார் தொழில்சங்கத்தால் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடரப்பட்டது.

அரசு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது 1

இந்த வழக்கில் 47 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்தது தனியார் நிறுவனம். இதனை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் விசாரித்து வந்தார்.

அம்மேல்முறையீட்டின் தீர்ப்பு இன்று(அக்.18) வெளியானது. அதில், மாற்று முறை ஆணவ சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டும் அரசு விடுமுறைகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது. அதே போல நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க முன்வந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்காத தொழிலாளர்கள் ஊதியம் பெற உரிமை இல்லை என்று தெரிவித்து, சேலம் தொழிலார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தவிட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்