தமிழ் திரைத்துறையின் ஜாம்பவான் என்று போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு. ‘சங்கிலி’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். ஆயினும் அவர் நடித்த ‘சின்ன தம்பி’ படம் செம ஹிட். அதன் பின்னரே தமிழ் திரையுலகில் பிரபலமானார். ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயகனாகவும், துணை நடிகராகவும், குணசித்திர வேடங்களிலும்

நடித்து அசத்தியுள்ளார்.வாரிசு நடிகராக இருப்பினும் தனது நடிப்பின் திறமையால் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். பல திரைப்படங்ளை தயாரித்தும் உள்ளார்.
தற்போது மணிரத்தினம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘அநிருத்த பிரம்மராயர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. அதற்காகவே பயிற்சிகளும் வர்க்ஔட்களும் செய்து எடைகள் பல குறைத்துள்ளார். அவ்வாறு அவரும் நடிகர் ரகுமானும் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் ட்விட்டர் வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.