எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மைல் கல்லாய் இருந்தவர். ஒரு சராசரி டிக்கெட் கலெக்டர் ஆக இருந்து இந்திய அணியின் கேப்டனாக மாறி இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை நாட்டிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இப்படி பலவேறு சாதனைகளை செய்து 2011 உலக கோப்பையை இந்திய அணிக்கு வாங்கி கொடுத்து அணியை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். இந்த அளவுக்கு புகழ்

தேடி தந்த இவர் கடந்த ஆண்டு தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ஐ பி எல் போட்டியில் மட்டும் இவர் தொடர்ந்து விளையாடுவார் என்று உறுதி அளித்தார். கேப்டன் கூல் தல டோனியை பாராட்டும் விதமாக இவருடைய வழக்கை வரலாறு எம்.எஸ்.தோனி திரைப்படம் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி ஒட்டுமொத்த தோனி ரசிகர்களையும் திருப்திபடுத்தியது என்றே கூறலாம். தற்போது நடக்க இருக்கும்

ஐ.பி.எல் போட்டிகளுக்காக சென்னை வந்து தோனி , தளபதி விஜயை நேரில் சந்தித்து பேசினார். சமீப நாட்களாக அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது குத்து சண்டை போடுவது போல் கையில் கிளௌஸ் மாட்டிக்கொண்டு மாஸான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
