Categories: அரசியல்

பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்க திட்டம் எங்கே..? திகார் சிறையிலிருந்து “ப.சிதம்பரம் ” கேள்வி!

வெளியிட்டது
பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்க திட்டம் எங்கே..? திகார் சிறையிலிருந்து "ப.சிதம்பரம் " கேள்வி! 1

ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் சார்பில் அவரது கணக்கில் இருந்து அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்து விடுபட்டு கடந்த 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது அவர் எனக்கு இந்திய பொருளாதாரத்தை பற்றி கவலையாக இருக்கிறது என்றார். இந்நிலையில் தனக்கு பதிலாக தனது குடும்பத்தினர் தனது டுவிட்டர் கணக்கிலிருந்து கேள்விகளை கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.டிவிட்டரில் கருத்து பதிவும் செய்யலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த 9-ஆம் தேதி அவரது டிவிட்டரில் சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளனர். அதில் அவர் கூறுகையில் ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் உங்களுக்கு பரிந்துரைத்த அதிகாரிகள் யாருமே ஏன் கைது செய்யப்படவில்லை. நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்கின்றனர் எனவும் கடைசியாக கையெழுத்திட்ட ஒரே காரணத்தால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினமும் ப.சிதம்பரம் சார்பில் அவரது டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியாகி வருகின்றன.இதனையடுத்து, இந்திய பொருளாதார சரிவால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு சிக்கல் குறைவான ஊதியம், குறைந்த முதலீடு, வர்த்தகம் குறைந்த நிலையில் இருப்பதால் ஏழைகளும், நடுத்தர மக்களும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே? என பதிவிட்டிருந்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்