திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அழைத்துள்ளார்.
தேசிய திருத்த குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்க் கட்சிகள் மற்றும் அமைப்புகள் என பல சமூகங்கள் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் அமைதியாக போராட்டம் நடந்தாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தன.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தின. அதைப்போல காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லியில் நேற்று சத்தியாகிரகம் நடத்தின.
தற்போது இதே பாணியை கேரளமும் பின்பற்ற இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஆலோசனை நடத்த வரும் 29ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி சமூக அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.