Categories: உலகம்

சிறுநீரை உறிஞ்சி முதியவர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சீன டாக்டர்கள்! குவியும் பாராட்டுகள்!!

வெளியிட்டது
சிறுநீரை உறிஞ்சி முதியவர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சீன டாக்டர்கள்! குவியும் பாராட்டுகள்!! 1

தெற்கு சீனாவின் குவாங்சோ நகரிலிருந்து இருந்து நியூயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் முதியோர் பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த டாக்டர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாவ் ஆகியோர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதனை செய்தனர்.

சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த டாக்டர்கள் விமானத்தில் கிடைத்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் நோயாளியை உயரத்தில் வைத்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறும் என்ற நிலை இருந்தது.

சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. யாரும் எதிர்பார்க்காத அந்த செயலை செய்தார் ஜாங்ஹாங். நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினார். சுமார் 800 மில்லி சிறுநீரை வெளியேற்றினார் அந்த டாக்டர்.கிட்டத்தட்ட 37 நிமிடங்கள் நீண்ட இந்த சிகிச்சைக்குப் பிறகு முதியவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். டாக்டரின் இந்த துரித செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளன .இரண்டு டாக்டர்களும் தாங்கள் வேலைபார்க்கும் தென் சீனாவில் உள்ள ஹைக்கோவில் உள்ள ஹைனன் மருத்துவமனையால் கவுரவிக்கப்பட்டனர், மேலும் ஒரு மருத்துவருக்கு இந்திய மதிப்பில் ரூ.13.92 லட்ச ரூபாய் ( 100,000 யுவான்) வழங்கப்படும் என்று அவரது மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் தலைவர் சூ ஆண்டிங் கூறுகையில், ஜாங்கின் அர்ப்பணிப்பு மனப்பான்மை குறித்து மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது, மேலும், ஜாங் ஒரு சர்வதேச மருத்துவ மன்றத்திற்காக நியூயார்க் சென்றுள்ளதால் அடுத்த வாரம் திரும்பி வருவார், அவர் திரும்பிய பிறகு மருத்துவமனை அவருக்கு விருதை வழங்கும் என கூறினார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்