இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானால் மட்டும்தான் முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஈரான் நாட்டு படைத்தளபதியான சுலைமானி அமெரிக்க நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கொடுத்தன.
ஆனால் திடீரென நேற்று அமெரிக்க தளங்கள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளதால் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ” பொருளாதார தடைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் காரணமாக திணறி வருகிறது. எனவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் உடன் போடுவார்கள் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.
அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால் அதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. இரு நாடுகளின் அமைதி ஈரான் கைகளில் மட்டுமே உள்ளது. எனவே இவ்விவகாரத்தில் அணுஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என டிரம்ப் கருத்திட்டு உள்ளார்.