ரன் அவுடான விதத்தில் வருத்தம் இருக்கிறது: தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுடான விதத்தில் டோனி வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது .

விளம்பரம்
ரன் அவுடான விதத்தில் வருத்தம் இருக்கிறது: தோனி 1
தோனி றன் அவுடான காட்சி

முக்கிய ஆட்டக்காரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாக, 50 ரன்கள் எடுத்திருந்த தோனி களத்தில் நின்றார். அப்போது இந்திய அணிக்கு 10 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ரன் எடுக்க ஓடிய தோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்ரோ நொடிகளில் எதிர் ஆட்டக்காரர்களை வீழ்த்தும் வல்லமை படைத்த தோனி, வெறும் இரண்டு அங்குல இடைவெளியில் ரன் அவுட்டானார்.

விளம்பரம்

அப்போது நியூசிலாந்து அணியிடம் தோற்ற இந்திய அணியில் அதன் பிறகு தோனி இடம் பெறாமலே இருந்தார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தோனி, ” உலகக் கோப்பை முதல் ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்தில் ரன்அவுட் ஆனேன். அப்போது நான் ஏன் கிரீசில் பாய்ந்து விழவில்லை என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். இந்த இரு அங்குள்ள வித்தியாசம் நான் பாய்ந்து விழுந்து இருக்கவேண்டும் என்று இப்போதும் சொல்ல வைக்கிறது என தனது தவறு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment