
கென்யா நாட்டைச் சேர்ந்த எலியாட் கிப்சோஜ் இன்று வியன்னா பார்கில் நடைபெற்ற 42.195-கிலோமீட்டர் (26.219 மைல்) தூர மாரத்தான் போட்டியில் 2 மணி நேரத்திற்குள் ஓடி வரலாற்றுச் சாதனை படைத்தார். அவர் மாரத்தானை 1 மணிநேர 59 நிமிட 40.2 வினாடிகளில் முடித்தார்.
ஒலிம்பிக் சாம்பியனான எலியாட் ப்ரேட்டர் பூங்காவில் இரண்டு மணி நேரத்திற்குள் மராத்தானை முடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 34 வயதான அவர் ஏற்கனவே செப்டம்பர் 16, 2018 அன்று பிளாட் பெர்லின் மராத்தான் போட்டியில் 2 மணிநேர 01 நிமிட 39 வினாடி நேரத்திற்குள் ஆண்கள் பிரிவில் உலக சாதனையை படைத்துள்ளார். ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 2:50 நிமிடங்களில் தகுந்த இடைவெளியை பராமரித்து மாரத்தானில் ஓடினார். மிட்-ரேஸில் (நடு-பந்தயம்) அவர் 11 வினாடிகள் முன்னதாகவே இருந்தார், ரசிகர்களும் அணிவகுத்து வந்தனர், பலர் கென்ய கொடிகளை அசைத்தனர், சத்தமாக அவரை உற்சாகப்படுத்தினர்.
மேலும் அவர்,
“நான் முதல் மனிதன் – எந்தவொரு மனிதனும் மட்டுப்படுத்தப்படாதவன் என்று நான் பலரை ஊக்குவிக்க விரும்புகிறேன். இந்த உலகத்தை ஒரு அழகான உலகமாகவும் அமைதியான உலகமாகவும் மாற்ற முடியும். என் மனைவியும் மூன்று குழந்தைகளும், அவர்கள் வந்து வரலாற்றைக் கண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். “
அவர் 2 மணிநேரத்திற்குள் ஓடி சாதனை படைத்தாலும் இந்த மாரத்தான் அமைக்கப்பட்ட மற்றும் வேகப்படுத்தப்பட்டதன் காரணமாக சர்வதேச தடகள கூட்டமைப்புகள் அவர் ஓடி முடித்த நேரத்தை உலக சாதனையாக கருதப்படாது என்று கூறியுள்ளது.
இப்போட்டியில் 1,500 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியன் மேத்யூ சென்ட்ரோவிட்ஸ் மற்றும் முன்னாள் உலக சாம்பியன் பெர்னார்ட் லகாட் பங்கு பெற்றனர்.