மோடி அரசு கண்ட அதிகளவிலான சில்லறை பணவீக்கம்!

6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் சில்லறை பணவீக்கம் வீழ்ச்சியடைந்து உள்ளது.

மோடி அரசு கண்ட அதிகளவிலான சில்லறை பணவீக்கம்! 1

காலநிலை மாற்றம் காரணமாக உணவு பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டு வெங்காயம். கடந்த ஆண்டு இறுதியில் வெங்காயம் விலை கட்டுப்படுத்த முடியாது நிலைக்கு சென்றது.

இதனால் மற்ற உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்க தொடங்கின. இதனால் சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த அளவிலான பணவீக்கத்தை முதல் முறையாக கண்டிருக்கிறது மோடி அரசு. காங்கிரஸ் ஆட்சியின் இறுதிக்காலத்தில் இதன் எண்ணிக்கை 8.33 சதவிகிதமாக இருந்தது.

அதிக பணவீக்கம், குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை ஆகியவற்றுடன், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைத் தவிர்க்க முடியாத  தேக்க நிலைமைக்கு தள்ளியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் உயர்ந்தது. விலையுயர்ந்த காய்கறிகளால் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.

வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை உயர்ந்த நிலையில் காய்கறிகள் டிசம்பர் மாதத்தில் பணவீக்க விகிதத்தை 60.50 சதவிகிதங்களாக பதிவு செய்தன.

இதேபோல் இறைச்சி மற்றும் மீன்களின் விலை நவம்பரில் 3.38 சதவிகிதகளாக இருந்ததைவிட டிசம்பரில் 9.5 சதவிகிதகளாக அதிகரித்துள்ளன.

அதேபோல் முட்டையின் விலைகள் 8.7சதவிகிதமாகவும், உணவு மற்றும் பானங்களை ஒட்டுமொத்தமாக 12.16 சதவிகிதங்களாக திகரித்துள்ளது .

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்