ராஜீவ் கொலையில் பெல்ட் குண்டு குறித்து புதிய அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் கொலையில் பெல்ட் குண்டு குறித்து புதிய அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு 1
உச்சநீதி மன்றம்

கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்தார் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி.

விளம்பரம்

இலங்கையில் விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் அந்த படுகொலை தமிழகத்தில் நிகழ்ந்தது. மனித வெடிகுண்டை பயன்படுத்தி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தான் பேரறிவாளன், முருகன், நளினி போன்றோர் நீண்ட கால சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இக்கொலைக்காக பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இல்லை என்பதால், புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பெல்ட் வெடிகுண்டு குறித்து சிபிஐ சிறப்புக் குழு அளித்த அறிக்கையில் திருப்தியில்லை என்றும், புதிய அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட மாணவர்கள், இளைஞர்களை ராகுல் காந்தி அழைப்பு!!

விளம்பரம்

Leave a Comment