பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள எரிமலை சில நாட்களில் வெடித்து சிதறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நாட்டில், பல எரிமலைகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில் லூசன் தீவில் உள்ளதால் எரிமலையும் ஒன்று.
தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அந்த எரிமலை நேற்று குமுறத் தொடங்கியது. அதில் இருந்து லார்வா குழம்புகள் வெளியேறியதால், ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்தது.

அந்த எரிமலை சில மணிநேரத்தில் அல்லது சில நாட்களில் வெடித்து சிதறலாம் என்று அந்த நாடு அரசு அறிவித்து உள்ளது. மேலும் நிலநடுக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு தெரிவித்துள்ளது.