Categories: சினிமா

யூ டியூப் சேனலில் புதிய சாதனையை படைத்த ‘பிகில்’ ட்ரெய்லர்!!

வெளியிட்டது
யூ டியூப் சேனலில் புதிய சாதனையை படைத்த 'பிகில்' ட்ரெய்லர்!! 1

யூ டியூப் சேனலில் ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் புதிய சாதனையை விரைவில் நிகழ்த்தவுள்ளது. தற்போது ‘ஜீரோ’ படத்தின் ட்ரெய்லர்தான் முதலிடத்தில் இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் வெளியிட்ட குறைவான நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை தாண்டியது. தென்னிந்திய மொழி படங்களின் ட்ரெய்லர்களில் அதிக விருப்பங்களைப் பெற்ற ட்ரெய்லர் உள்ளிட்ட பல சாதனைகளை யூ டியூப் சேனலில் நிகழ்த்தியுள்ளது ‘பிகில்’ ட்ரெய்லர். தற்போது 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், இந்திய அளவில் அதிக விருப்பங்களைப் பெற்ற ட்ரெய்லரில் ஷாரூக் கான் நடித்த ‘ஜீரோ’ முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை 1.9 மில்லியன் விருப்பங்களைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த ‘வார்’ படத்தின் ட்ரெய்லர் இருந்தது. இது 1.6 மில்லியன் விருப்பங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘வார்’ படத்தின் சாதனையை ‘பிகில்’ ட்ரெய்லர் வென்றுள்ளது. 1.8 மில்லியன் விருப்பங்களைப் பெற்று 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ‘பிகில்’ ட்ரெய்லர் வெளியாகி 2 நாட்களே ஆவதால், இன்னும் சில நாட்களில் ‘ஜீரோ’ படத்தின் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ‘பிகில்’ படத்தை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன், படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தவுள்ளது படக்குழு.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்