
அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படம் சமீபத்தில் அனைத்து திரைபட ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தை திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கி இருந்தார். இதில் பிஜூ மேனன், பிருத்விராஜ் நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தை தமிழ் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் பெற்றுள்ளார். இந்த ரீமேக் படத்தில் முதலில் சரத்குமார், சசிகுமார் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது, அதன்பிறகு சசிகுமார், ஆர்யா சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது இப்படத்தின் ரீமேக்கில் முதல்முறையாக சூர்யா, கார்த்தி சேர்ந்து நடிப்பதாக வதந்தி பரவி வருகிறது.
இதை பற்றி விரிவாக ஆய்வு செய்த போது , ” இது தொடர்பாக சூர்யா, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த படத்தில் சசிகுமார் நடிப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.