
மலையாள படம் பிரேம் மூலம் கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சினிமா உலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தின் கதாநாயகனாக நிவின் பாலி,கதா நாயகிகளாக மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
மேலும் இளைஞர்கள் மத்தியில் மலர் டீச்சர் பெரும் வரவேற்பைப் பெற்றார். “மலர் வேடம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று நினைத்து இருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அந்த படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் கூறுகையில்,“படத்தில் வரும் வினய் ஃபோர்ட், சோபின் ஷாஹிர் ஆகிய கதாபாத்திரம் தான் பேசப்படும் என்று நினைத்தேன். காரணம், அவர்கள்தான் மலர் கேரக்டருக்கான வர்ணனையை செய்வர்.
அந்த கேரக்டர் தான் மலர் டீச்சர் பிரபலமடைய பெரிய காரணமாக இருந்தது. திரைக்கதையில் அது சின்ன யோசனைதான். அந்த இரண்டு கதாபாத்திரங்கள் இல்லை என்றால், படம் மிகவும் போரடிக்கும் காதல் கதையாக மாறியிருக்க வாய்புகள் இருந்தது” என்றார். இன்று வரை ரசிகர்கள் அனைவரும் தன்னை மலர் டீச்சர் என்று அழைப்பது குறி்த்து, எதுவும் பதில் பேச முடியாமல் ஆனந்தக்கண்ணீர் மட்டுமே வருகிறது என்று சொன்ன சாய் பல்லவி, மீண்டும் மலராக நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.