
இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் ஆல்-ரவுண்டருமான ஆன்ட்ரூ பார்ரி மெக்டொனால்டு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெக்டொனால்டு அவர்கள் இதற்கு முன்பு இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒரு அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 2009ம் ஆண்டில் விளையாடினார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் இருந்துள்ளார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மெக்டொனால்டு அவர்கள் கூறுகையில்
“நான் ராயல்ஸ் அணியுடன் சேருவதில் மகழ்ச்சி அடைகிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வது ஒரு பெரிய மரியாதை. ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு ஒரு புதிய, அற்புதமான சவால், உலகின் மிகப் பெரிய விளையாட்டு லீக் ஒன்றில் எங்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்க நான் காத்திருக்க முடியவில்லை”
ராஜஸ்தான் அணியின் நிர்வாகத் தலைவர் ரஞ்சித் பர்தகூர் அவர்கள்
“நாங்கள் ஆன்ட்ரூ மெக்டொனால்டு அவர்களை தலைமை பயிற்சியாளராக நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆண்ட்ரூ மற்ற விளையாட்டுகளில் விதிவிலக்கான பயிற்சியாளர்களுடன் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சீசனுக்குத் தயாராகி வருவார், மேலும் ராயல்ஸ் அணியைச் சந்திக்க எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வருவார்.”
என்று கூறியுள்ளார். மேலும் வரும் டிசம்பர் 19ம் தேதியில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எலுக்கான வீரர்களின் ஏலத்தில் ஆன்ட்ரூ அவர்கள் ராயல்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட இருக்கிறார்.